நாடகங்கள்-2

யார் கடவுள்?

காட்சி – 1

(ஒரு வீட்டின் வாசலிலிருந்து காமிரா உள்நோக்கி நகர்கிறது. தியாகு மேசையின் அருகில் நின்றுகொண்டு உள் நோக்கி சத்தமாக கத்துகிறான்.)

தியாகு: எருமை மாடே! என்னாடி பண்ற? உன்னை இந்த டேபிளை தொடச்சிட்டுதானே பேப்பரை வைக்க சொன்னேன்.

(மனைவி ராஜலெட்சுமி ஓடி வருகிறாள்.)

ராஜம்: இல்லீங்க! பாத்திரம் வெளக்கிட்டிருந்தேன். அதான்! இப்ப தொடச்சிடறேன். (பயந்துகொண்டே துடைக்கிறாள்)

தியாகு:ஒரு வேளக்கிம் துப்பில்ல! எல்லாத்தையும் ஒரு ஆளு சொல்லிக்கிட்டே இருக்கணும். எங்க உம் புள்ள?

ராஜம்: டூசனுக்கு போயிட்டானே!

தியாகு: டூசனுக்கு?… இப்ப ரொம்ப அவசியம். தலையில நேத்துதானே தையல் போட்டுச்சு. ஒரு நாள் வீட்டுல கிடக்கவேண்டியதுதானே?

ராஜம்: இல்லீங்க! நல்லாதான் இருந்தான்.

தியாகு: என்னத்த நல்லா இருந்தான்? மாசத்துக்கொருதரம் மண்டைய ஒடச்சிக்கிட்டு… காம்பவுண்டு மேலே ஏறி அப்படியே தலை குப்புற குதிக்கிறானாம்… புள்ளய பெத்துக்குடுடின்னா… குரங்கப் பெத்து வச்சிருக்கா.

ராஜம்: அது சின்ன வயசு… அதான்…. (இழுக்கிறாள்.)

தியாகு: ஆமா… சின்ன வயசு?… டாக்டர்கிட்ட போயி, “டாக்டர்! போன மாசம் இடது பக்கம் தையல் போட்டீங்களா? இப்ப வலது பக்கம்! அதே மாதிரி 6 தையல் போடுங்க”ன்னு, ரத்தம் சொட்ட சொட்ட நிக்குது. டாக்டர் மயக்கம் போட்டு உழுந்துட்டாரு!

ராஜம்:(சிரிக்கிறாள்) டாக்டக்கு பிரஷரோ என்னவோ?

தியாகு: ஆமா! நீ போயி வைத்தியம் பாரு. போடி போக்கத்தவளே. போயி வேலய பாரு! போ!…

காட்சி – 2

(வாசல் பக்கம் வருகிறான். வாசலின் அருகில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்த பேருந்து நிறுத்தத்திற்கும் இவன் வீட்டு வாசலுக்கும் நடுவில் சுமார் 25 வயதுள்ள, கை கால் ஊனமுற்ற, மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞன் அழுக்கான கிழிந்த ஆடையுடன் அமர்ந்திருந்தான். அதை பார்த்ததும் தியாகு உள்புறம் திரும்பி கத்துகிறான்.)

தியாகு: ஏய்… என்னாடி இது…? யார் இவன்? இங்க வந்து உக்கந்திருக்கான்….!

(பேறுந்து நிறுத்தத்தில் நிற்கும் சிலர் திரும்பிப் பார்க்கிறார்கள்)
(மனைவி ஓடி வருகிறாள்).

ராஜம்: யாருங்க?…

தியாகு: இவந்தான்.. இவன் எப்படி இங்க வந்தான்.? வீட்டு வாசலுக்கு பக்கத்தில…

ராஜம்: தெரியலியே!… பாவமா இருக்குங்க!

தியாகு: என்ன பாவமா இருக்கு..! எல்லாம் திருட்டுப் பயலுக… ஊர ஏமாத்த நடிப்பானுங்க..போ!…போ!

(அவனைப்பார்த்து) டேய்… எந்திரிச்சி அந்தாண்ட போ!

(அவன் அப்படியே கிடக்கிறான்.)

(தியாகு மேலும் இரண்டு முறை விரட்டிப் பார்த்துவிட்டு முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு திரும்பி வருகிறான்.)

தியாகு: கர்மம்… கர்மம்… எல்லாம் தலைவிதி….

ராஜம்: என்னங்க?

தியாகு: நொன்னாங்க… அவன் போ மாட்டேங்கிறான். நான் சொல்றதும் அவனுக்கு புரியல… நீ முன்னடியே பாத்து விரட்ட வேண்டியதுதானே? வீட்டுக்குள்ள என்னா பண்ணிக்கிட்டு இருந்த… லூசு!

ராஜம்: நா பாக்கலிங்க…

தியாகு: என்னா பாக்கல… போ! போய்த்தொலை….
(முனவலுடன் வந்து வாசல் படியில் அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருக்கிறான்.)

காட்சி – 3

(உள்ளே ராஜம் புலம்பிகொண்டிருக்கிறாள்)
ராஜம்: ராட்சசன்! ஆளையும் மூஞ்சியையும் பாரு! எப்பப் பார்த்தாலும் என்னை கரிச்சி கொட்டுறதே வேல… பாவம். முடியாதவங்களுக்கு ஒரு உதவி செஞ்சா என்னா? கொஞ்சம் சோறு போட்டா தேஞ்சா போயிடுவ..? கஞ்சப்பிசினாரி….

காட்சி – 4

(படியில் உட்கார்ந்து தியாகு அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.)

(அந்தப் பிச்சைக்காரனுக்கு பெயர் தெரியவில்லை…. நமக்கு புரிவதற்காக “பிச்சை” என்றே வைத்துக்கொள்வோம்)

காட்சி – 5

பேறுந்து நிறுத்தத்திலிருந்து சிலர் பிச்சையை பார்த்தார்கள். சிலர் வேகமாக பார்க்காததுபோல திரும்பிக்கொண்டார்கள். சிலர் ஒரு பரிதாபத்தை முகத்தில் காட்டிவிட்டுப் போனார்கள். மிகச்சிலரே உதவவேண்டும் என்று நினத்தார்கள். இரண்டு பேர் மட்டுமே உதவி செய்தார்கள்.

தொடரும்………………

Advertisements
பின்னூட்டமொன்றை இடுக

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s