கவிதைகள்

Kudikaranகடையோரம் கைக் குழந்தையுடன் காய்கறி வாங்கும் காதலி.
சிகரெட்டை வாங்கி பற்ற வைத்தபோது
அவள் பார்வை நான் பற்ற வைத்த தீக்குச்சி நெறுப்பாய் சுட்டது.
அவளை வெறுப்பேற்ற புகையை உள்ளிழுத்து வெளியிடுகையில்…
கத்திரிக்காயின் கால்சிய விதைகள் கல்லீரலை அடைப்பது போலே…
என் இதய நாளங்களில் இரத்த ஓட்டம் அடைத்தது காதல்.
அவளால் தொலைந்த வாழ்க்கையை விட்டு
விலகி விலகி வெகுதூரம் போகிறேன்…..
முடியாமல் மீண்டும் வந்து வந்து….. வீழ்கிறேன்…..
தந்தை சொல்லி, மனைவி சொல்லி,
கடைசியில் பெற்ற மகனும் சொல்கையில்தான்….
உறைக்கிறது…. கை கால்கள் நடுங்குகின்றன…
“தெண்டச்சோறு”……. மகன் வாயால் மதிப்பான பட்டம்….
நடுக்கம் மறைக்க, துக்கம் மறக்க….
இதோ மீண்டும் தேடி நடக்கிறேன்….
தள்ளாடி தள்ளாடி…. மதுக்கடைக்கு…
நான் வீழ்ந்து கிடப்பதை பார்த்த பின்பும்கூட….
அய்யோ…..காதலிக்கப் போகிறீர்களா?…..

























 
 


 
 
 
 
 
 
 
 
 
 
 


2 பின்னூட்டங்கள்

2 thoughts on “கவிதைகள்

பின்னூட்டமொன்றை இடுக